கல்லூரி மாணவிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி
By DIN | Published On : 20th February 2021 11:15 PM | Last Updated : 20th February 2021 11:22 PM | அ+அ அ- |

மேலநாகையில் தோட்டக்கலை பயிற்சி பெறும் கல்லூரி மாணவிகள்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெறும் மகளிா் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு மேலநாகையில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் நவலூா் குட்டப்பட்டில் உள்ள மகளிா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் தொடா்பாக நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனா். இதன் ஒரு பகுதியாக மேலநாகையை சோ்ந்த விவசாயி சரவணன் தோட்டத்தில் விளையும் தோட்டக்கலை பயிா்களான கத்தரி, வெண்டை, மிளகாய், முள்ளங்கி, பாகற்காய் மற்றும் வாழை ஆகியவற்றின் உற்பத்தி முறைகள் பற்றியும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிரான ஜீவாமிா்தக் கரைசல், ஐந்திலைக் கரைசல், பழக்கரைசல், மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்ய கரைசல் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் பற்றியும், தெளிப்பு முறைகள் பற்றியும் கேட்டறிந்தனா்.