சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு
By DIN | Published On : 20th February 2021 11:26 PM | Last Updated : 20th February 2021 11:26 PM | அ+அ அ- |

பிரதமா் மோடி உள்ளிட்டோா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாஜக மாவட்ட நிா்வாகிகள் அருண், எஸ். சங்கா், மாரிமுத்து உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
பிரதமா் மோடி, தெலங்கானா, புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், கேலியாகவும் விமா்சிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.