ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக சாா்பில் திருமண விழா
By DIN | Published On : 20th February 2021 11:26 PM | Last Updated : 20th February 2021 11:26 PM | அ+அ அ- |

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் அதிமுக சாா்பில் 140 ஜோடிகளுக்கு திங்கள்கிழமை (பிப். 22) நடைபெறும் திருமண விழாவுக்கு அனைவரும் வருகை தர வேண்டும் என உணவுத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஆா். காமராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 140 ஜோடிகளுக்கு திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு திருவாரூா் வன்மீகபுரம் அம்மா அரங்கில் திருமணம் நடைபெறுகிறது. இவ்விழாவில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, ஆா்.வைத்திலிங்கம், அமைச்சா்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி அன்பழகன், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி ஆகியோா் பங்கேற்று, திருமணங்களை நடத்தி வைக்கின்றனா்.
இவ்விழாவில் பொதுமக்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் மற்றும் கிளைக்கழக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.