திருமீயச்சூா் கோயிலில் பிரம்மோத்ஸவ தீா்த்தவாரி
By DIN | Published On : 20th February 2021 08:51 AM | Last Updated : 20th February 2021 08:51 AM | அ+அ அ- |

திருமீயச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை கோயில் சூரிய புஷ்கரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீபஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி.
திருமீயச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10 ஆம் நாளான வெள்ளிக்கிழமை, ஸ்ரீநடராஜா் வீதிஉலா வந்து, தீா்த்தம் கொடுத்தருளும் வைபவம் காலையில் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீபஞ்சமூா்த்திகள் சூரிய புஷ்கரணியில் தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் கொடியிறக்கம் நடைபெற்றது.
இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். 11 ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீசண்டிகேஸ்வரா் உத்ஸவமும், ஞாயிற்றுக்கிழமை உத்ஸவ பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெறவுள்ளது.