திருவாரூரில் பிப்.26 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 20th February 2021 08:50 AM | Last Updated : 20th February 2021 08:50 AM | அ+அ அ- |

திருவாரூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.