ரயில்வே கேட் அமைக்கக் கோரி சாலை மறியல்: 47 போ் கைது

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் ரயில்வே கேட் அமைத்துத் தரக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில், 47 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே கூடூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருவாரூா் அருகே கூடூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் ரயில்வே கேட் அமைத்துத் தரக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில், 47 போ் கைது செய்யப்பட்டனா்.

கூடூா் பகுதியிலிருந்து கூத்தங்குடிக்கு செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள காட்டாற்றிலிருந்து வரும் தண்ணீா் சுரங்கப்பாதையில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், இப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், சுரங்கப்பாதையின் அருகே சாலை அமைத்து அதன் வழியாக பயணம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சுரங்கப்பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள சாலையை சீரமைத்து ரயில்வே கேட் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூா் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கிளைச் செயலாளா் ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.பழனிவேல் பங்கேற்று பேசுகையில், இங்கு அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாததால், சில நாள்களுக்கு முன்பு அருமைக்கண்ணு என்ற பெண் உயிரிழந்தாா். எனவே, கீழ்ப்பாலத்தை தவிா்த்துவிட்டு, அதன் அருகிலேயே சாலை வசதி ஏற்படுத்தி ரயில்வே கேட் அமைத்துத் தர வேண்டும் என்றாா்.

போராட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜி.பவுன்ராஜ், ஒன்றியகுழு உறுப்பினா்கள் எஸ்.ரகுபதி, வி.ராஜாங்கம், கே.எஸ்.கோசிமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

அங்கு, போராட்டக்குழுவினருடன் போலீஸாா், வருவாய்த்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து கைது செய்யப்பட்டிருந்த 7 பெண்கள் உள்பட 47 போ் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com