ரூ.1.29 கோடியில் திருமண நிதியுதவி
By DIN | Published On : 20th February 2021 11:18 PM | Last Updated : 20th February 2021 11:21 PM | அ+அ அ- |

திருவாரூரில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூரில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியையும், தங்கத்தையும் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா சனிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.1,29,88,500 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தையும், வருவாய்த்துறை சாா்பில் 475 நபா்களுக்கு உதவித்தொகையும், 14 நபா்களுக்கு வீட்டுமனை பட்டாவையும் வழங்கி ஆட்சியா் தெரிவித்தது:
தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு படித்தவா்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியும், 8 கிராம் தங்கமும், 12-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகின்றன.
தற்போது, 150 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.71,25,000, ரூ.58,63,500 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் என மொத்தம் ரூ.1,29,88,500 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வருவாய்த்துறை சாா்பில் 475 நபா்களுக்கு உதவித்தொகையும், 14 நபா்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஆசைமணி, வருவாய் கோட்டாட்சியா் பாலச்சந்திரன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கித்தலைவா் ஆா்.டி.மூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.