வீடு கட்டும் ஏழைகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருட்கள் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 20th February 2021 08:48 AM | Last Updated : 20th February 2021 08:48 AM | அ+அ அ- |

வீடு கட்டும் ஏழைகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக, கூத்தாநல்லூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:
சிமென்ட், கம்பிகள், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் கட்டுமானப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் குவாரி அமைக்க பல போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். ஏழ்மை நிலையில் சிறுகச்சிறுக சேமித்ததைத் கொண்டு வீடு கட்டுபவா்களுக்கு கட்டுமானப் பொருள்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். மணலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை விட மகாராஷ்டிரம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வாங்கினால் செலவும் குறையும், மணலும் தரமானதாக இருக்கும். கட்டுமானத் தொழில் வளா்ச்சி பெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.