அதிமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1000 கோடி கடன்: அமைச்சர் காமராஜ்

தனது சொந்தச் சட்டமன்றத் தொகுதியான நன்னிலத்தில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்புப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் திங்கள்கிழமை அமைச்சர் இரா.காமராஜ் துவக்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கி, அமைச்சர் இரா. காமராஜ், நன்னிலத்தில் துவக்கி வைத்த போது எடுத்த படம்.
பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கி, அமைச்சர் இரா. காமராஜ், நன்னிலத்தில் துவக்கி வைத்த போது எடுத்த படம்.

தனது சொந்தச் சட்டமன்றத் தொகுதியான நன்னிலத்தில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்புப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியைத் திங்கள்கிழமை தமிழக  உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து மக்களுக்கானப் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது, எந்த அரசியல் கட்சியும், பொதுமக்களும் எதிர்பார்க்காத வகையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், கரோனாவால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வழக்கமாகச் சிறப்பாகக் கொண்டாடும் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை, இந்த ஆண்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகையாக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2500, முழு கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட, பொங்கலிடுவதற்குத் தேவையானப் பொருள்களை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல அதிமுக ஆட்சியின் ஒன்பது ஆண்டு காலத்தில் ஏழை, நடுத்தரக் குடும்பத்தில் உள்ளப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி, தமிழகத்திலுள்ள ஒன்பதாயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், பல ஆண்டுகளாக இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும், இடுபொருள் நிவாரணத்தொகை, ஒரு ஹெக்டேருக்கு ருபாய் 1,3500 ஆக இருந்ததை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு இருபதாயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் நிவாரணத் தொகை வழங்குவதற்கிருந்த, நில உச்சவரம்பையும் நீக்கியுள்ளார். இத்திட்டத்தினைக் கட்சி வித்தியாசமின்றி, விவசாயிகள், விவசாயச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் வரவேற்று, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை யாரும் எதிர்பார்க்காத வகையில், தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்குத் தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக, மிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் தலைவர் வே.சாந்தா, மாவட்ட வேளாண்மை விற்பனை க் குழுத் தலைவர் டாக்டர் கே.கோபால், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவர் சிபிஜி.அன்பு, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைத் தலைவர் எஸ்.கலியபெருமாள், கூத்தனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் இராம குணசேகரன், நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ என் ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சம்பத், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளர் செல்.சரவணன் மற்றும் உள்ளாட்சி, கூட்டுறவுத்துறை அமைப்பு மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் கொண்டனர் கலந்து கொண்டனர் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com