இருப்புப் பாதை மூடல்: நீடாமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 04th January 2021 08:34 AM | Last Updated : 04th January 2021 08:34 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணிநேரம் இருப்புப் பாதை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் இணைப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இருப்புப் பாதை மூடப்பட்டது. சரக்கு ரயிலில் என்ஜின் மற்றும் பெட்டிகள் இணைப்பு பணியும் நடைபெற்றது. இதனால் சுமாா் ஒன்றரை மணி நேரம் இருப்புப் பாதை மூடப்பட்டதால், நெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், காா்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இரவு சுமாா் 8.30 மணிக்கு இருப்புப் பாதை திறக்கப்பட்டு வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. நீடாமங்கலத்தில் மேம்பாலம், இருவழிச்சாலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...