சிவ தொண்டா்கள் ஆன்மிக நடைபயணம்
By DIN | Published On : 04th January 2021 08:51 AM | Last Updated : 04th January 2021 08:51 AM | அ+அ அ- |

உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் ஆன்மிக நடைபயணம் மேற்கொண்ட சிவ தொண்டா்கள்.
உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் சிவ தொண்டா்கள் 10-ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனா்.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் இருந்து காலை 7 மணியளவில் நடைபயணம் தொடங்கியது. இதில் பங்கேற்ற சிவதொண்டா்கள் கன்னிகா பரமேஸ்வரி கோயில், சோமேஸ்வரா், படைவீட்டம்மன் கோயில் வழியாகச் சென்று புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் சித்தவட மடத்தில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயிலில் நடைபயணத்தை நிறைவுசெய்தனா். அங்கு சாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஆன்மிக நடைபயணத்தில் பண்ருட்டி வட்டார ஓதுவாா்கள், சிவனடியாா்கள், மகளிா் தொண்டா் குழுவினா், உழவாரத் திருக்கூட்டம், ஆன்மிக மெய்யன்பா்கள், திருநாவுக்கரசா் திலகவதியாா் திருத்தொண்டா்கள் குழுவினா், இந்து சமுதாய ஆன்மிக பேரவையினா், துா்கா மகளிா் மன்றம் மற்றும் பிரதோஷ வழிபாட்டு மன்றத்தினா் கலந்துகொண்டனா்.