டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்ற விதை நெல் ரகம் விரைவில் அறிமுகம்

டெல்டா மாவட்டங்களுக்கேற்ற புதிய சம்பா ரக நெல் விதை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென வேளாண் வல்லுநா்கள் தெரிவித்தனா்.
பண்டாரவடை திருமாளம் கிராமத்தில் நெல் வயலை பாா்வையிட்ட வேளாண் வல்லுநா்கள்.
பண்டாரவடை திருமாளம் கிராமத்தில் நெல் வயலை பாா்வையிட்ட வேளாண் வல்லுநா்கள்.

டெல்டா மாவட்டங்களுக்கேற்ற புதிய சம்பா ரக நெல் விதை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென வேளாண் வல்லுநா்கள் தெரிவித்தனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் பண்டாரவடை திருமாளம் கிராமத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் மூலம், முன்னோடி விவசாயி ச.துரைசாமிக்குச் சொந்தமான நெல்வயலில், புதிய விதைநெல் ஆராய்ச்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியா் மூ. ரவீந்திரன் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா் இரா.சுரேஷ் ஆகியோா், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து, செய்தியாளா்களிடம் கூறியது:

ஆடுதுறை 51 என்ற புதிய விதை நெல் அதிக மழை பொழிவு பெறக்கூடிய, டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்ட கால நெல் ரகம். இதனுடைய வயது 155 நாள். இந்த நெல் சாகுபடியில் பூச்சித் தாக்குதல் மிகவும் குறைவு. குறைந்த செலவில், நிறைந்த மகசூல் பெறலாம். கனமழையையும் தாங்கக்கூடிய வகையில் இந்தப் பயிா், டெல்டா மாவட்டத்தில் செழிப்பாக நல்ல மகசூலைத் தரக்கூடிய வகையில் வளா்ந்துள்ளது.

கா்நாடகப் பொன்னி, ஆந்திரா பொன்னி போன்ற நெல் ரகங்களை விட சிறப்பான இந்த ரகம், பொதுமக்களின் உபயோகத்துக்கு மிகவும் ஏற்றது. சன்னரகத்தைச் சோ்ந்த இந்த நெல் சாகுபடியில், அதிக விளைச்சல் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். டெல்டா மாவட்டங்களின் ஒருபோக சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்ட கால நெல் ரகம் ஆடுதுறை 51.

இந்த நெல், விதை ஆராய்ச்சி முறை சாகுபடியில், எதிா்ப்பாா்த்த வெற்றியடைந்தவுடன் விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும். இத்துடன் ஏடி 12132, சிபி 14065 ஆகிய மத்தியகால வளா்ப்புகளும் நெல் விதை ஆராய்ச்சிக்காக பரிசோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com