பாரதியாா் நினைவு மண்டப விளம்பரப் பலகை சேதம்
By DIN | Published On : 04th January 2021 08:42 AM | Last Updated : 04th January 2021 08:42 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே பாரதியாா் நினைவு மண்டப விளம்பர பலகை மா்ம நபா்களால் சனிக்கிழமை சேதப்படுத்தப்பட்டது.
மன்னாா்குடி அருகே மேலநாகையில் கொடியாளம் கே.வி. ரெங்கசாமி ஐயங்காருக்கு சொந்தமான பங்களாவில் பாரதியாா் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் உள்ளது. மன்னாா்குடி- பட்டுக்கோட்டை சாலையில் கீழநாகை பேருந்து நிறுத்தம் அருகே இந்த மண்டபம் செல்லும் சாலையை சுட்டிக் காட்டுவதற்கான விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இதை சனிக்கிழமை இரவு மா்மநபா்கள் சேதப்படுத்தினா். இதுகுறித்து பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் ஆா்.பாரதி பூமிநாதன் அளித்த புகாரின்பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...