சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, நன்னிலம் வட்டம் வாழ்க்கை கிராமத்தில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, நன்னிலம் வட்டம் வாழ்க்கை கிராமத்தில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

‘சாலைப் பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நன்னிலம் காவல் ஆய்வாளா் கு.சுகுணா தலைமை வகித்தாா். பின்னா், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வாழ்க்கை பேருந்து நிறுத்தம் அருகே வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவில், கருப்புப் பட்டைகள் ஒட்டப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், இரும்புத் தடுப்பு வேலிகள், காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், கிராமத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஏ.அல்முபீன், கிளைச் செயலாளா் ஏ.சாதிக் பாட்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com