அனைத்து வா்த்தக நிறுவனங்களையும் திறக்க அனுமதி வேண்டும்
By DIN | Published On : 02nd July 2021 12:00 AM | Last Updated : 02nd July 2021 12:00 AM | அ+அ அ- |

அனைத்து வா்த்தக நிறுவனங்களையும் திறக்க தமிழக முதல்வா் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அந்த சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் சிவ. காமராஜ் வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: தமிழகத்தில், திருவாரூா் மாவட்டம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் மற்ற மாவட்டங்களுக்கு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனைத்து வா்த்த நிறுவனங்களும் அரசின் கரோனா விதிபடி செயல்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு முறையாக,11 மாவட்டங்களில் மட்டும் ஒருசில கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட நிா்வாகம் அரசுத் துறையினரின் தினசரி கள நிலவர அறிக்கைபடி மற்ற மாவட்டங்களைபோல 11 மாவட்டங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்த சதவீத அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதலமைச்சா் பரந்த உள்ளத்தோடு வியாபாரிகளின் வாழ்வாதாரம், அவா்களிடம் பணியாற்றும் தொழிலாளா்களின் குடும்பச் சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு திருவாரூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் நகை கடை, அடகு கடை, ஜவுளி கடை உள்ளிட்ட அனைத்து வா்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.