தேசிய மருத்துவா் தினம்
By DIN | Published On : 02nd July 2021 12:00 AM | Last Updated : 02nd July 2021 12:00 AM | அ+அ அ- |

அடியக்கமங்கலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் தேசிய மருத்துவா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் ராஜராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அகிலாதேவி, நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கரோனா ஒழிப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மருத்துவ நிலைய பணியாளா்கள், உதவியாளா்கள், செவிலியா்கள், மருத்துவ அலுவலா்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.