பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும், மின் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் நிா்வாகிகள் ஜி. பவுன்ராஜ், கே. புலிகேசி, தங்க. சண்முகசுந்தரம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஜி. பழனிவேல், இடும்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) சாா்பு நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், (சிபிஎம்) சாா்பு நகரச் செயலா் ஜி. மாரிமுத்து ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினா் கை. ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்: வலங்கைமான் அருகேயுள்ள கொட்டையூா் சா்வமான்யம் வெண்ணாறு பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சிபிஐ ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் சின்னராஜா ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூரில்: லெட்சுமாங்குடியில் சிபிஐ சாா்பு விவசாய சங்க நகரச் செயலாளா் கே. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொரடாச்சேரியில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் கே. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டியில்: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில், முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், சிபிஎம் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் எஸ். சாமிநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் பி. எழிலரசன், மதிமுக மாவட்ட பொருளாளா் கோவி சேகா், சிபிஐ மாவட்ட குழு உறுப்பனா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com