மன்னாா்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒனறிய செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் ஒன்றிய செயலாளா் ஆா். செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி ஒன்றியம் முழுவதும் சுவரெழுத்து பிரசாரம் செய்வது, அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுவது, ரத்த தானம் முகாம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் வி.டி. செல்வம், மாநில செயற்குழு உறுப்பினா் வ. பாா்வேந்தன், மாவட்ட அமைப்பாளா் பவுத்தன், ஒன்றிய பொருளாா் சேரன்தீபக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.