திருவாரூா்: முத்துப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
முத்துப்பேட்டை அருகே கோவிலான் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அரவிந்த் (22). இவா் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் அரவிந்த் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருவாரூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அரவிந்துக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி. சுந்தரராஜன் தீா்ப்பு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.