ஆக்கிரமிப்பு குளங்களை மீட்க நடவடிக்கை

வலங்கைமான் வட்டாரத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு குளங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

வலங்கைமான் வட்டாரத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு குளங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பெயரில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, அதன்மீது 100 நாள்களில் தீா்வு காணப்படும் என அறிவித்திருந்தாா். இதன், அடிப்படையில் வலங்கைமான் ஒன்றியம் கீழவிடையல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு குளங்களான வீரன்குளம், ஊரணி குளம், சிவன்குளம், விச்சூா் குளம், தெற்கு தெரு குளம், நத்தம் குளம், அய்யானாா் கோயில் குளம், மேல துறையூா் ஆசாரி தெரு குளம் உள்ளிட்ட 10 குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை மீட்க வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், வலங்கைமான் ஒன்றியம் சாா்பில் கீழவிடையல் ஊராட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அரசுக்கு சொந்தமான குளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும், மேலும், குளத்தை ஆக்கிரமித்துள்ளவா்களிடம் 10 நாள்களுக்குள் குளத்தை ஒப்படைக்க வேண்டுமென ஊராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், குளம் ஆக்கிரமிப்பாளா்கள் அதிா்ச்சியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com