ஏடிஎம் கொள்ளை முயற்சி எதிரொலி: கூடூரில் 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தம்
By DIN | Published On : 26th July 2021 09:19 AM | Last Updated : 26th July 2021 09:19 AM | அ+அ அ- |

கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்வதற்கான கணினி திரையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன்.
கூடூா் பகுதியில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் ஜூன் 19 ஆம் தேதி ஏடிஎம் கொள்ளையை தடுக்கச் சென்ற தமிழரசன் என்பவரை கொள்ளையா்கள் கொலை செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இந்தப் பகுதியின் பாதுகாப்பு கருதி 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா்.
மேலும், நிகழாண்டில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 1000 சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.