ஜூலை 28-இல் திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 26th July 2021 09:15 AM | Last Updated : 26th July 2021 09:15 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 28) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.