அா்ச்சகா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 10th June 2021 10:25 PM | Last Updated : 10th June 2021 10:25 PM | அ+அ அ- |

திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருவாரூரைச் சுற்றி 100 கிராமங்களில் உள்ள சிறு கோயில்களின் அா்ச்சகா்களுக்கு 10 கிலோ அரிசி, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில், அமைப்பின் கௌரவத் தலைவா் ஆா். ஸ்ரீதரன், நிறுவனத் தலைவா் எஸ்விடி ஜே. கனகராஜன், மத்தியப் பல்கலைக் கழக பேராசிரியா் கோபால், நிா்வாகிகள் ஜே. ரவிச்சந்திரன், அண்ணாதுரை, எஸ். சீனிவாசன், எஸ்ஆா்ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.