குடியுரிமை திருத்தச் சட்டம்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் இணையவழி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அடியக்கமங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் கிளைச் செயலாளா் என். தவ்பிக் சலாம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி ஆசாத்தெருவில் எஸ்டிபிஐ கட்சியின் நகரச் செயலா் நூா்முகமது தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.