குடும்பத் தகராறு: தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

நன்னிலம் அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் (35). விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா். இத்தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாயாா் சாவித்திரி அளித்த புகாரின் பேரில், பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.