நீடாமங்கலம்: ஆஞ்சநேயர் கோயிலில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம்

நீடாமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹரமங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு விஜயம் செய
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர  சங்கட ஹரமங்கல மாருதி ஆஞ்சநேயரை  வழிபட்ட காஞ்சி  ஶ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.  சகடபுரம்  ஶ்ரீகிருஷ்ணானந்த  தீர்த்த மகாசுவாமிகள்.
திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர சங்கட ஹரமங்கல மாருதி ஆஞ்சநேயரை வழிபட்ட காஞ்சி ஶ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சகடபுரம் ஶ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள்.

நீடாமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹரமங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு விஜயம் செய்தார்.
அவருக்கு ஸ்ரீசகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் சார்பில் நாதஸ்வர இன்னிசை முழங்க, வேதவிற்பன்னர்கள் வேத கோஷங்கள் எழுப்பிட, யானை ஆசிர்வதித்து பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து ஸ்ரீசகடபுரம் ஸ்ரீவித்யாபீடம்
ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகள், காஞ்சி ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி 
சுவாமிகள் சந்திப்பு நடைபெற்றது. கோயில் அனைத்து சன்னதிகளிலும் இரு சுவாமிகளும் தரிசனம் செய்தனர். 
இருசுவாமிகளும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இதில் கோயில் ஸ்தாபகர்ரமணி அண்ணா, ஸ்ரீமடத்தின் ஸ்ரீகார்யம் சந்திரமெளலீஸ்வரர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி, நாராயணி நிதிநிறுவனத் தலைவர் கார்த்திகேயன், கோவிந்தபுரம் ரருக்மணி கோயில்விட்டல் சுவாமிகள், கோயில் அறங்காவலர் ஜெகன்னாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com