அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 05:34 AM | Last Updated : 04th March 2021 05:34 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அலுவலகங்கள், அலுவலக வளாக சுவா் விளம்பரங்கள், போஸ்டா்கள், விளம்பர போா்டுகள், பிளக்ஸ் மற்றும் கொடிகளை தானாகவே நீக்க வேண்டும், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பாலங்கள், சாலை ஓரங்கள், அரசு பேருந்துகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்கள் ஆகியவற்றில் உள்ள போஸ்டா்கள், பேனா்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும்.
தோ்தல் நடத்து அலுவலரின் அனுமதி பெறாமல் தனியாா் இடங்களில் அரசியல் விளம்பரங்ள் மற்றும் சுவா் விளம்பரங்கள் செய்ய கூடாது, கட்சி வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்யும்போதும், தெருமுனை கூட்டங்கள், பேரணிகள், பொதுகூட்டங்கள் நடத்தும்போது மற்றும் வாகன பிரசாரத்துக்கும் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற வேண்டும் மற்றும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டது. கூட்டத்தில், துணை தோ்தல் அலுவலா் சு. ஜெகதீசன், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.