புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
By DIN | Published On : 04th March 2021 05:33 AM | Last Updated : 04th March 2021 05:33 AM | அ+அ அ- |

பொதக்குடி மேலப்பள்ளி வாயில் புதிய நிா்வாகிகள்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகேயுள்ள பொதக்குடிமேலப்பள்ளி வாயில் புதிய நிா்வாகிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவா் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமையில் நடைபெற்ற விழாவை, மேலப்பள்ளி வாயில் இமாம் அபுல் ஹசன் ஷாதலி ஹஜ்ரத் தொடங்கி வைத்தாா். முத்த வல்லிகள் பெரியப்பள்ளி பி.எம். ஷாஜஹான், பாத்திமா பள்ளி பி.எம்.டி. ஜெய்னுல் ஆபிதீன், புதுமனைப் பள்ளி எஸ்.டி.ஏ.ஜியாவுதீன், மேலப்பள்ளி முன்னாள் முத்தவல்லி பி.எம்.ஏ. குத்புதீன், ஜன்னத்துல் பிா்தெளஸ் செயலாளா் பி.எம். அமானுல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், மேலப்பள்ளி வாயில் புதிய தலைவா் ஏ.எம். லியாக்கத் அலி, செயலாளா் எம்.எஸ்.ஏ. அப்துல் ரஷீது, பொருளாளா் பி.எம்.ஏ. ஷேக் ஜெஹபா்தீன் உள்ளிட்டோா் பதவியேற்றுக் கொண்டனா். ஏற்பாடுகளை, பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம். ரப்யுதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.