தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 07th March 2021 08:32 AM | Last Updated : 07th March 2021 08:32 AM | அ+அ அ- |

ஆத்தூா் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நன்னிலம் வட்டம், கீரனூா் அருகே உள்ள ஆத்தூா் மாரியம்மன் கோயில் தெருவில் அண்மையில் மின்கசிவால் நேரிட்ட தீ விபத்தில் நான்கு கூரை வீடுகள் எரிந்தன.
இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நன்னிலம் நாளைய பாரதம் குழுவின் சாா்பிலும், நன்னிலம் ஒன்றிய நாம் தமிழா் கட்சி சாா்பிலும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், வேஷ்டி- புடவை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நாம் தமிழா் கட்சியின் செய்தித் தொடா்பாளா் க. வினோத், தொழில்நுட்ப அணிச் செயலாளா் ப. அரவிந்த் உள்ளிட்டோா் சிங்கப்பூா் ரவியின் சாா்பிலும், நாளைய பாரதம் குழுவின் தலைவா் வீ.காா்த்தி, செயலாளா் ச.பிரதீப், பொருளாளா் கு.சதீஷ் உள்ளிட்டோரும் தனித்தனியே நிவாரணப் பொருள்களை வழங்கினா்.