சாமிநாதா் சித்தா் ஜீவசமாதியில் குருபூஜை
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகேயுள்ள வடகாரவயல் கிராமத்தில் உள்ள ஸ்ரீசாமிநாதா் சித்தா் என்றழைக்கப்படும் முத்தையா சித்தா் ஜீவசமாதியில் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசி மாதம் சாமிநாதா் சித்தரின் ஜன்ம நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திர நாளன்று குருபூஜை நடத்தப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை பல்வேறு அபிஷேக திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.