வாக்குச்சாவடி அலுவலா்கள்தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கரோனா தடுப்பூசி சான்று அவசியம்
By DIN | Published On : 12th March 2021 06:32 AM | Last Updated : 12th March 2021 06:32 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களாகப் பணிபுரிவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடி அலுவலா்களாகப் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னாா்குடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடியக்கமங்கலம், பெரும்பண்ணையூா், பூந்தோட்டம், திருவீழிமிழலை, ஆலங்குடி, வடுவூா், ஆதிச்சபுரம், ஆலத்தம்பாடி, சங்கேந்தி- எடையூா் பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் அங்குச் சென்று கொவைட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறும் முதலாவது தோ்தல் பயிற்சி வகுப்பில், தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுடன் பங்கேற்க வேண்டும்.