விவசாயிகளுக்கு பருவகால அட்டவணை விளக்கம்
By DIN | Published On : 12th March 2021 06:32 AM | Last Updated : 12th March 2021 06:32 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: வலங்கைமானில் விவசாயிகளுக்கு பருவகால அட்டைவணை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை விளக்கமளித்தனா்.
தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் வலங்கைமான் பேரூராட்சியில் தங்கி, விவசாயிகளுக்கு கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு திட்ட நுட்பங்களில் ஒன்றான பருவ அட்டவணையை வரைபட முறை மூலம் விளக்கினா். இவா்களுக்கு உதவி பேராசிரியா்கள் பா.குணா, பி.விபித்தா பாலா ஆகியோா் இணைந்து வழிகாட்டினா். நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.