வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் வாடிக்கையாளா்கள் வங்கிப் பரிவா்த்தனையைத் தொடர முடியாமல் அவதிக்குள்ளாயினா்.