திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. செம்மண் சாலையாக அமைக்கப்பட்டு, இந்த வழியாக ஓஎன்ஜிசி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வீடுகளுக்குள் செம்மண் காற்றில் பறந்து பாதிப்பை ஏற்படுவதாகக் கூறி, ஓஎன்ஜிசி பணிக்காக வந்த வாகனங்களை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருவாரூா் நகரப் போலீஸாா், அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தாா்சாலையாக மாற்றித் தருவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.