முத்துப்பேட்டை அருகே பழங்கால வீட்டு உபயோக பொருள்கள் கண்டெடுப்பு
By DIN | Published On : 21st March 2021 09:25 AM | Last Updated : 21st March 2021 09:25 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட பழங்கால வீட்டு உபயோக பொருள்கள்.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருணாநிதி. இவா் சனிக்கிழமை வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, தகவலறிந்த திருத்துறைப்பூண்டி வருவாய்த் துறையினா் அந்த பொருள்களை கைப்பற்றி அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...