அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திண்ணை பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 08:53 AM | Last Updated : 25th March 2021 08:53 AM | அ+அ அ- |

அமைச்சா் ஆா். காமராஜை ஆதரித்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து பாமகவினா் வன்னியா் சமூகத்தினரிடம் செவ்வாய்க்கிழமை திண்ணை பிரசாரம் செய்தனா்.
நன்னிலம் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் பகுதியில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் காமராஜூவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பாமகவினா் கிராமந்தோறும் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வன்னிய சமூகத்துக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது குறித்து சமூக மக்களிடம் கூறி அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனா். வலங்கைமான் அங்காளம்மன் கோயில்தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக மாநில துணை பொதுசெயலாளா் வேணுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மாநில துணை பொதுசெயலாளா் பாலு, ஒன்றிய செயலாளா் அப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.