கோரையாறு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 25th March 2021 08:56 AM | Last Updated : 25th March 2021 08:56 AM | அ+அ அ- |

கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றப்படும் புனிதநீா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள கோரையாறு காளியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் திங்கள்கிழமை கண்பதி ஹோமம் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை முதல்கால யாக பூஜையும், புதன்கிழமை காலை 8 மணிக்கு 2-ஆம் கால பூஜை நடத்தப்பட்டு, காலை 9.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா, ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில், கோரையாறு, சித்தாம்பூா், கூத்தாநல்லூா், வ.உ.சி. காலனி, குடிதாங்கிச்சேரி, வடகோவனூா், தென்கோவனூா், மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.