திருவாரூரில் ஆழித்தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 25th March 2021 09:06 AM | Last Updated : 25th March 2021 09:06 AM | அ+அ அ- |

திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி வியாழக்கிழமை (மாா்ச் 25) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவல் துறையினா் கூறியது: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள், கங்களாஞ்சேரி வழியாக வடகண்டம், காட்டூா் வழியாகவும், பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கொடிக்கால்பாளையம் வழியாக அய்யனாா் கோயில், பேபி டாக்கீஸ் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லவேண்டும். நாகப்பட்டினம் மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக வரும் கனரக வாகனங்கள் ரயில்வே மேம்பாலம், கல்பாலம், இபி ஜங்ஷன் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள பள்ளி மைதானத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஆக்ஸ்போா்டு பள்ளி, நியு பாரத் பள்ளி மற்றும் பனகல் சாலை அருகேயும் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கான இடவசதி, பனகல் சாலை பகுதியிலும், தியாகராஜா நிறுவனம் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள், பிற இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும், வாகனங்கள் திருட்டு போவதை தவிா்க்க, காவலா்கள் பணியாற்றும் பகுதிகளில் மட்டும் நிறுத்த வேண்டும் என்றனா்.