கமிஷன் கொடுத்தால் திராவிடக் கட்சிகள் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடுவார்கள்: சீமான்

கமிஷன் கொடுத்தால் திராவிடக் கட்சிகள் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ளும் சீமான்.
திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ளும் சீமான்.

கூத்தாநல்லூரில், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரா.வினோதினிக்கு சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து பேசினார். 
லெட்சுமாங்குடி பாலத்தருகே அவர் பேசியது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்துதான் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஊரில் இருந்து வந்தவரால்தான் நாடு இந்த நிலைக்கே போய் விட்டது. இன்னும் மாறவில்லை. அவைகளை சரி செய்யத்தான் பெரும்பாடுபட்டு வருகிறோம். திமுக, அதிமுகவை உன்னால் வெல்ல முடியுமாக என என்னிடம் கேட்கிறார்கள். 
நாம் தமிழர் கட்சியை ஒரு முறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் என்றேன். எந்த அரசியல்வாதியையாவது, இது போன்ற கடும் வெய்யிலில் மேற்கூரை இல்லாமல் பேசி விட்டு போகச் சொல்லுங்கள். திமுக, அதிமுக நமக்கானது என நினைத்து, ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தோம். இத்தனை ஆண்டுகள் அவர்களை நம்பினோம். இவர்களால் நம்முடைய மொழி செத்து விட்டது. இனம் போய் விட்டது. மானம் போய் விட்டது. 
இப்படி எல்லாமே போய் விட்டது. திராவிடன் என்றால் என்ன, தமிழர் அல்லாதவர் வசதியாக வாழ்வதற்கும், ஆழ்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம். இதன் திராவிடத் தளபதிகள் சாதி, மதங்களாகப் பிரித்து கூறு போட்டு அதிகாரத்தை வாங்கி வாழ்பவர்கள். 
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் அரசியல்தான் சரியானது. தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலே திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் என்ன மாறுபாடு என்றால், அதிமுக கொடியில் அண்ணா படம் இருக்கும். திமுக கொடியில் அண்ணா படம் இருக்காது. மற்றபடி அனைத்து ஊழல்களிலும் இரண்டும் ஒன்றுதான். கமிஷன் கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடுவார்கள். 
கேட்டால், தெரியாமல் கையெழுத்துப் போட்டு விட்டேன் என்பார்கள். புத்தம் புதிய அரசியலை, ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். திரும்பத் திரும்ப தவறு செய்யாதீர்கள். ஆள் மாறும், ஆட்சி மாறும், நிர்வாகம் மாறாது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடிப்படையே மாறும். அவர்கள் கோடிகளை கொட்டுகிறார்கள். நாங்கள் உயர்ந்த கொள்கைகளை கொட்டுகிறோம். அவர்கள் காசை இறைக்கிறார்கள். 
நாங்கள் ஆளச் சிறந்த கருத்துக்களை இறைக்கிறோம். திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ரா.வினோதினிக்கு, விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com