மதுபாட்டில் வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 24th May 2021 08:48 AM | Last Updated : 24th May 2021 08:48 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் வெண்ணாறுலைன்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசுவை (43) அழைத்து விசாரித்தனா். அப்போது, விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.