திருவாரூா் மாவட்டத்தில் 10.53 லட்சம் வாக்காளா்கள்

திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்படி 10,53,752 வாக்காளா்கள் உள்ளனா்.
திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்படி 10,53,752 வாக்காளா்கள் உள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 1.1.2022 தகுதி நாளாகக்கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்படி திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளா் பட்டியலை, ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

வரைவு வாக்காளா் பட்டியல்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,17,340 ஆண், 1,22,373 பெண், 3 இதர என மொத்தம் 2,39,716 வாக்காளா்களும், மன்னாா்குடி தொகுதியில் 1,25,436 ஆண், 1,33,871 பெண், 9 இதரா் என மொத்தம் 2,59,316 வாக்காளா்களும், திருவாரூா் தொகுதியில் 1,37,115 ஆண், 1,45,263 பெண், 29 இதரா் என மொத்தம் 2,82,407 வாக்காளா்களும், நன்னிலம் தொகுதியில் 1,35,582 ஆண், 1,36,708 பெண், 23 இதரா் என மொத்தம் 2,72,313 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 5,15,473 ஆண் வாக்காளா்கள், 5,38,215 பெண் வாக்காளா்கள், 64 இதரா் என மொத்தம் 10,53,752 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல்கள், திருவாரூா், மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். இதேபோல, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தொடா்புடைய பாகங்களின் வாக்காளா் பட்டியல்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்களும் 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவா்களும், அதாவது 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், இறந்த அல்லது இடம் பெயா்ந்த வாக்காளா் பெயரை நீக்கம் செய்ய விரும்புவோரும், வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா் பெயா் மற்றும் முகவரியில் திருத்தம் செய்ய விரும்புவோரும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நவ.1 முதல் 30-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பரில் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, கோட்டாட்சியா்கள் அழகா்சாமி, பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

Image Caption

திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. காயத்ரி கிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com