கூத்தாநல்லூர் சூப்பர் மார்க்கெட்டில் தீவிபத்து: ரூ.20 லட்சம் எரிந்து சேதம்

கூத்தாநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பிடித்து எரிந்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. 
கூத்தாநல்லூர் சூப்பர் மார்க்கெட்டில் தீவிபத்து: ரூ.20 லட்சம் எரிந்து சேதம்

கூத்தாநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பிடித்து எரிந்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள, ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான ராஜாத்தி சூப்பர் மார்க்கெட்டை, சனிக்கிழமை இரவு வழக்கம் போல் 10 மணிக்கு பூட்டி விட்டு, வீட்டுக்குப் போய் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கடையைத் திறக்க வந்து கொண்டிந்துள்ளார். அப்போது, கடையின் மேல் மாடியில் இருந்து புகை மூட்டம் வருவதாகத் தெரிய வந்துள்ளது. 

கடையைத் திறந்த போது, உள்ளிருந்து கரும்புகை வெளியில் வந்தது. உடன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மின் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்துள்ளது தெரிய வந்தது. 

இதில், கடையில் வைத்திருந்த மளிகைப் பொருள்கள், பரிசுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பீரோ, குளிர்சாதனப் பெட்டிகள், நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள அனைத்துப் பொருள்களும் முழுவதுமாக தீயில் எரிந்து கருகியுள்ளன. தகவல் அறிந்த, கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் க.பாலச்சந்திரன், கி.பாலசுப்ரமணியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 


மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு, கடையின் உரிமையாளருக்கு ஆறுதல் தெரிவித்தார். பூட்டியிருந்த சூப்பர் மார்க்கெட்டில் தீப்பிடித்து, எரிந்த செய்தி கூத்தாநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயை அணைத்துக் கொண்டிருக்கும் போது, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரனின், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி கீழே விழுந்து, எரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com