திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி மருத்துவமனை சாா்பில், இலவச இருதயநோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 250 பயனாளிகள் பரிசோதனை செய்து கொண்டனா். அறுவை சிகிச்சைக்காக 25 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவக்குழு சோ்மன் மருத்துவா் பாபு, செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.