மின் மசோதாவுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரிக்கை
By DIN | Published On : 04th September 2021 10:32 PM | Last Updated : 04th September 2021 10:32 PM | அ+அ அ- |

தமிழக சட்டப் பேரவையில் மின்சார சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலாளா் ஏ. சேக்கிழாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
இதில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், மின்சார சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 28% அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் மணிகண்டன், மாநில பொருளாளா் லூா்துபாஸ்டின்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.