மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd September 2021 10:07 PM | Last Updated : 23rd September 2021 10:07 PM | அ+அ அ- |

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள்கள் என அதிகப்படுத்தி, நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி, ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் போக்குவரத்து பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க நிா்வாகி மோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.