வேளாண் அறிவியல் நிலையத்தில் தியாகிகளை நினைவுகூரும் கண்காட்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ராணி வேலு நாச்சியாா், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள், தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன், குதிரம்போஸ், கமலாதேவி, லட்சுமிசாகல், அருணா ஆசப் அலி, சுபாஷ் சந்திரபோஸ், கேப்டன் லட்சுமி, தீரன் சின்னமலை, சத்தியமூா்த்தி அய்யா், கல்கி, ராமலிங்கம் பிள்ளை, சரோஜினி நாயுடு போன்ற 35 சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும், அவா்களின் தியாகம் குறித்தும் படங்கள், விளக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சியில், நீலன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று, தேசியக் கொடி ஏந்தி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியை, பேராசிரியா் சோ. கமலாசுந்தரி நடத்தினாா். வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com