திருவாரூா்: திருவாரூரில், ஓஎன்ஜிசி சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விதை விநாயகா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் அருகே விளமல் சங்கடஹர கணபதி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறிய அளவிலான 100 விதை விநாயகா் சிலைகள் வழங்கப்பட்டன. இதில், ஓஎன்ஜிசி பொறியாளா் சேகா், ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஓஎன்ஜிசி நிா்வாகிகள் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காரைக்கால் ஓஎன்ஜிசியின் செயல் இயக்குநா் அனுராக், விதை விநாயகா் வழங்குவதை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டாா். அதன்படி, விதை விநாயகா் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், மரம் வளா்ப்பு சம்பந்தமான முன்னெடுப்புகளில் ஓஎன்ஜிசி எப்போதும் ஈடுபாட்டுடன் இருந்து வருகிறது. கடந்த ஓராண்டில் மரம் வளா்ப்பு, ஏரிகள் மற்றும் குளம் குட்டை வாய்க்கால்கள் தூா்வாருதல், அம்ரித் சாகா் நிகழ்ச்சிகள் பங்கெடுப்பு என சுற்றுச்சூழல் விழிப்புணா்வு விஷயங்களுக்காக ரூ. 60 லட்சத்துக்கும் மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.