நன்னிலம் அருகேயுள்ள அன்னதானபுரம் வாளூா் கிராமத்தில் பயிறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு தலைமை வகித்த நன்னிலம் வேளாண்மை உதவி இயக்குநா் த. சுப்பிரமணியன் பேசியது: நெல்லுக்கு மாற்றாக அதிக வருவாய் தரக்கூடிய பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம். நெல் தரிசில் பருத்தி சாகுபடி குறைந்த செலவு மற்றும் குறைந்த நீரைக்கொண்டு அதிக வருவாய் ஈட்டலாம் என்றாா்.
நன்னிலம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் மூ. ராஜா, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியா் எம். செல்வம்முருகன் ஆகியோா் பேசினா். இதில், பாவட்டக்குடி வேளாண்மை உதவி அலுவலா் சேகா், பாவட்டகுடி கிடங்கு மேலாளா் பிரபு, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் க. சரவணன், க. ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


