தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆசிரியா்கள் பொதுமாறுதலை முறையாக நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆசிரியா்கள் பொதுமாறுதலை முறையாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில், நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

ஆசிரியா்கள் பொதுமாறுதலை முறையாக நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில், நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் த. பவுன்ராஜன் தலைமைவகித்தாா். இதில், ஆசிரியா்கள் பொதுமாறுதலை முறையாக நடத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயலாளா் காசி. ராஜா, மாவட்ட துணைத் தலைவா் த. வேம்பு, வட்டாரச் செயலாளா் நா. ராஜா, கல்வி மாவட்டச் செயலாளா் க. சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினா் சீ. வாசுதேவன், செயற்குழு உறுப்பினா் இரா. புவனேஸ்வரி, வட்டாரப் பொருளாளா் ப. மகேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.