கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூத்தாநல்லூர்: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரம்ம முகூர்த்தத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 6:05 am

DIN


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரம்ம முகூர்த்தத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

லெட்சுமாங்குடி, மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பரம்பரை அறங்காவலர் எம். சுப்பிரமணியன் ஆலோசனையின் பேரில், கோயிலின் முன்பு யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. யாகசாலையில், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சமித்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, இன்று விடியற்காலை 4 மணிக்கு, பிம்பசுத்தி, இரட்ஷாபந்தனம் செய்யப்பட்டு, பூர்ணாகுதி செய்தனர். யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த புனித கலசங்களை சிவாச்சாரியார்கள், தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்தனர்.

Story image

தொடர்ந்து, கோயிலின் பரம்பரை அர்ச்சகர் என். தினகர் குருக்கள் உத்தரவுப்படி, 5.20 மணிக்கு கும்ப கலசத்தில், வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து, குருக்கள் தினகர் கூறியது. இராமன் தசரனின் கட்டளையை ஏற்று வனவாசத்தில் தவம் செய்தார்.

அப்போது வெண்ணாற்றின் அக்கரையில், லெட்சுமணன் தங்கிக் கொண்டு, ராமனும், சீதையும், ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரரையும், ஸ்ரீ மங்களாம்பிகையைும் தரிசனம் செய்ய பரிசலில் வந்தனர். இதனால் இக்கோயில் இராமனாதன் வட்டம் என்றும், அக்கரையில் உள்ள ஊர் இலெட்சுமணன்குடி எனவும் வழங்கப்படுகிறது.  தற்போது, லெட்சுமான்குடி என வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 

கோயிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், சிவன், கல்யாணப் பெருமாள், மஹாலெஷ்மி, தெஷ்ணாமூர்த்தி, சண்டீ கேஸ்வரர், கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

Story image
Story image

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ராஜகோபுரம், மூலவர்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளின் சுவாமிகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவில், கரோனா தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.